செய்திகள் :

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

post image

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள்  தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்கும் போது, 

" அட போம்மா... இத பத்தி நிறைய பேரு கேட்டுட்டாங்க. ஆனா யாரும் இந்த படித்துறைய சரி செய்ய வரல. இந்த வடவாறு ஆத்துப்பால சரிவுல 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழுறோம். நாங்க ஒன்னும் 10 வருசம் 20 வருசமா இங்க வாழல. காலங்காலமா தலைமுறை தலைமுறையா இங்கதான் வாழ்ந்துட்ட இருக்கோம். 

எட்டு வருஷத்துக்கு மேல ஆகிட்டு. ஆனா இந்த படித்துறையை சரி செய்ய யாருமே முன் வரல. கரந்தை புதுப்பாலம் கட்டும்போது சரி செய்றோம்னு சொன்னாங்க. பாலம் கட்டியே 2 வருஷம் ஆச்சு. ஆனா இன்னும் இந்த படித்துறைய சரி செய்யல‌. நாங்களும் கொடுக்காத மனு இல்ல.. பேசாத ஆள் இல்ல.. இதக்கேட்டு கேட்டு சலிச்சு போச்சு..

குழந்தைகளுக்கும் ஆபத்து:

 இந்த படிக்கட்டுகள் சரி இல்லாம இருப்பதால் எங்க குழந்தைகளை தனியா விடவே பயமா இருக்கு‌‌. எங்களுக்கு இந்த ஆறு தான் எல்லாமே. நாங்க புழங்கறதுக்கு இந்த ஆற்றை தான் பயன்படுத்துவோம். இங்க 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்காங்க. பெரியவங்க, வயதானவர்கள் எல்லாமே இந்த படிக்கட்ட தாண்டி தான் போகணும். இப்படி சிதைந்து பாசி பிடித்த படிக்கட்டு வழியாக குழந்தைகள்ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் ஏன் இளைஞர்கள் கூட போக பயப்படுறாங்க. இப்படி சிதைந்த நிலையில் கிடக்கும் படிக்கட்டுல  வழுக்கி  விழுந்தால் எங்க உயிருக்கு ஆபத்து தான் ஏற்படும்.

தொற்று ஏற்படும் அபாயம் :

அதுமட்டும் இல்லாம இந்த படிக்கட்டு மட்டும் பிரச்னை இல்லை. பின்னாடி வர கழிவு நீரும் ரொம்ப சிரமத்தை ஏற்படுத்துது.‌ தஞ்சாவூர் மேலவீதி, கீழவாசல்(மீன் மார்க்கெட் கழிவு) அகழி நீர் கழிவு, சாக்கடை கழிவுனு எல்லா கழிவுமே இந்த வடவாறுல தான் வந்து கலக்குது. நிமிஷத்துக்கு நிமிஷம் துர்நாற்றமும் வீசுது. எங்க புள்ள குட்டிங்க மட்டும் இல்லாம பாலத்துக்கு அடுத்து இருக்கிற பள்ளி, கல்லூரியில் உள்ள பிள்ளைகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துற நிலையில் இருக்கிறது. இந்த கழிவு நீரால் கொசு தொல்லையும், மழை பெய்தால் வருகின்ற துர்நாற்றமும் தொற்று நோயினை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

அதிகாரிகள் சொல்வதென்ன?

இதைக் குறித்து நாங்களும் நிறைய பேர் கிட்ட சொன்னோம்... கரந்தை பாலம் கட்டியதுமே உடனே இந்த படித்துறையை சரி செய்யுறோம் என கூறினார்கள். தளம் கட்டி முடிச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு.. படித்துறை மட்டும் அப்படியே தான் இருக்கு. இதை எப்பதான் சரி செய்வார்கள் என்று நாங்களும் எதிர்பார்த்துதான் இருக்கோம்" என அப்பகுதி மக்கள் கூறினர்.

TVK : விஜய்யை வளைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க... டெல்லி பல்ஸ் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் செல்லப் போகிறார்... அவரை கையில் எடுத்துவிட்டது பா.ஜ... மேலும் பார்க்க

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது... மேலும் பார்க்க

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பய... மேலும் பார்க்க

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார். ஹமாஸின் ஒப்புதல் ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்... மேலும் பார்க்க