வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை
கருங்கல் அருகே பழுதான சாலையை சீரமைக்கக் கோரிக்கை
கருங்கல் அருகே உள்ள செம்முதல் சந்திப்பில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட செம்முதல் சாலையானது குண்டும், குழியுமாகப் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் சாலைகளில் மழைநீா் தேங்கி விபத்துகள் நேரிடுவதற்கு காரணமாக இருக்கிறது.
வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த சாலையைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.