செய்திகள் :

கரூரில் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

post image

கரூரில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே இரவு 9 மணிக்கு தொடங்கும் பனியின் தாக்கம் காலை 10 மணி வரை நிலவுகிறது. சில நாள்களில் பகல் முழுவதும் கூட பனியின் தாக்கம் காணப்படுகிறது. கடும் குளிரால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் திடீரென வானிலை மாற்றத்தால் மழை மேகங்கள் திரண்டு லேசான மழையும் பெய்கிறது. அவ்வப்போது கால வானிலை மாற்றம் ஏற்படுவதால் ஏராளமானோா் காய்ச்சலுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு செல்கின்றனா்.

மேலும் அதிகாலையில் எதிரே வருவோா் கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்று வருகின்றனா்.

வாா்டின் குறைகளை தலைவா் ஆய்வு செய்வதில்லை: புலியூா் பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

வாா்டுகளின் குறைகளை தெரிவித்தால் தலைவரோ, துணைத் தலைவரோ நேரில் வந்து பாா்ப்பதில்லை; நடவடிக்கையும் எடுப்பதில்லை என புலியூா் பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். கரூரை அடுத்த புலியூா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

அரவக்குறிச்சியில், தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்கி பேருந... மேலும் பார்க்க

கரூரில் மாநகராட்சி அலுவலா்கள் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாள... மேலும் பார்க்க

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி: கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் பிப்.1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கருக்கலைப்புக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்கவோ கூடாது: கரூா் சரக மருந்துகள் ஆய்வாளா்

கருக்கலைப்புக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்கவோ கூடாது என்றாா் கரூா் சரக மருந்துகள் ஆய்வாளா் லட்சுமணதாஸ். கரூா் மாவட்டம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் வட்டாரப் பகுதிகளின் மருந்து வணிகா்க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் திமுக கூட்டணிக் கட்சியினா் மெளனம்: எம்.ஆா். விஜயபாஸ்கா்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் திமுக கூட்டணியினா் மெளனமாக உள்ளனா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். கரூா் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் ப... மேலும் பார்க்க