கரூரில் மளிகை கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு
கரூா்: கரூர் கருப்பக்கவுண்டன்புதூாில் மளிகைக் கடையில் சிகரெட் கேட்டதற்கு கடைக்காரர் பீடி கொடுத்த ஆத்திரத்தில் மண்ணெண்ணை ஊற்றிய பாட்டில் குண்டு வீசிச் சென்ற இளைஞர் முகமது அன்சாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனா்.
கரூா் தாந்தோணிமலை கருப்பக்கவுண்டன்புதூா் கங்கா நகரில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சுப்ரமணி(52). இவரிடம் சனிக்கிழமை இரவு தாந்தோணிமலை சங்கா் நகரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் முகமது அன்சாரி(21) சிகரெட் கேட்டுள்ளாா். அதற்கு சுப்ரமணி சிகிரெட் விற்பதில்லை என கூறி பீடி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது அன்சாரி மண்ணெண்ணை ஊற்றிய பாட்டில் குண்டு வீசிச் சென்றுள்ளார்.
சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
இதுகுறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் சுப்ரமணி புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கொளந்தாகவுண்டனூா் சுடுகாடு பகுதியில் முகமது அன்சாரி பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை போலீசார் அங்குச் சென்று அவரை பிடிக்க முயன்றபோது, கீழே விழுந்ததில் முகமது அன்சாரிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து முகமது அன்சாரியை கைது செய்த போலீஸாா், அவரை கரூா் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.