செய்திகள் :

கரூர்: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி; டிட்கோ அலுவலரைக் கைதுசெய்த போலீஸ்!

post image

சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) வருவாய் அலுவலரகப் பணியாற்றுபவர் சூர்யபிரகாஷ். அதற்கு முன்பு இவர், சென்னை மாநகர அம்மா உணவகத்தின் இயக்குநர் பொறுப்பிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்தார். மேலும், இவர் கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுளுக்கு முன்பு வரை, பல ஆண்டுகள் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது, கரூரைச் சேர்ந்த நல்லமுத்து என்ற தொழிலதிபரிடம் அஸ்ஸாமில் கொசுவலை ஆர்டர் பெற்றுத் தருவதாகவும், சூரிய மின் சக்தி பேனல் நிறுவ ஆர்டர் பெற்றுத் தருவதாகவும் கூறி, மூன்று தவணைகளில் ரூ.16 கோடி வரை பெற்றுள்ளார். ஆனால், பணம் பெற்றுவிட்டு ஆர்டர்கள் பெற்றுத் தராததால், கரூர் மாவட்டக் குற்றப்பிரிவில் நல்லமுத்து புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர் சென்னையில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக வருவாய் அலுவலரான சூர்யபிரகாஷைக் கைதுசெய்தனர். அதனைத் தொடர்ந்து,  விசாரணைக்காக நேற்று மாலை கரூர் அழைத்துவரப்பட்ட சூர்யபிரகாஷிடம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின், கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.  

சூர்யபிரகாஷ்

அதனைத் தொடர்ந்து, கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு, இவ்வழக்கில் சூர்யபிரகாஷ் மாவட்ட வருவாய் அலுவலராக கரூர் மாவட்டத்தில் பணியாற்றியபோது, வட்டார வளர்ச்சி அலுவலராக அப்போது பணியாற்றி வந்த கார்த்திகேயன், திருப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார், முத்துக்குமார் உள்ளிட்ட தரகர்கள் என மொத்தம் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் அஸ்ஸாமைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட மேலும் 4 பேருக்குத் தொடர்பு உள்ளதாகவும், அவர்களையும் இந்த வழக்கில் போலீஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் முன்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய சூரியபிரகாஷ் கரூர் தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டு மாவட்டத்தில் `லாக்' ஆகிய புல்லட் ஸ்பெஷலிஸ்ட் திருடர்கள்... ஸ்கெட்ச் போட்டுப் பிடித்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாக தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வழக... மேலும் பார்க்க

`அரிய வகை விலங்கு இது' - கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து இன்ஸ்டாவில் `ரீல்ஸ்' - சிக்கிய இருவர்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து `அரிய வகை விலங்கு' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 நபர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து எச்சரித்து... மேலும் பார்க்க

பள்ளி பேருந்தில் பாலியல் கொடுமை... 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கிளீனர் கைது..

செங்கல்பட்டு பாலூரில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியின் பேருந்தில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு நடந்துள்ளது. பாலூரில் உள்ள அந்தத் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள... மேலும் பார்க்க

தேனி: ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை ஏமாற்றி, டூவிலரை அடகு வைத்த நபர் கைது.. என்ன நடந்தது?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ராஜேஸ். இவரின் மனைவி ஜெயலட்சுமி (38) சொந்த பிரச்னை காரணமாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கவந்துள்ளார். மனு எழுதுவதற்காக கலெ... மேலும் பார்க்க

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து, தற்கொலை நாடகமாடிய கணவன்... விருதுநகர் அருகே நடந்த கொடூரம்

வெம்பக்கோட்டை அருகே கணவன் மனைவி இடையேயான குடும்ப சண்டையில் மனைவியை கொன்று உடலை தீ வைத்து எரித்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேச... மேலும் பார்க்க

சென்னை: பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு... போலீஸில் சிக்கிய மாணவி!

சென்னை, அசோக்நகர், 19-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கலாவதி (74). இவர், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் மணி. உடல்நலம் பாதிக்கப்பட்ட மணியை கவனித்துக் கொள்ள விழுப... மேலும் பார்க்க