செய்திகள் :

கரூர் பலி: குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச் செயலர் ஆறுதல்!

post image

கரூரில் விஜய் பிரசார கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி ஆறுதல் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவருடன் இருந்தனர்.

கரூரில் கடந்த 27 ஆம் தேதி இரவு தவெக சார்பில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி, கேரளத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சிவ தாசன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று நேரில் சந்தித்தனர்.

அப்போது, திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், நாகை சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, மாநிலக் குழு உறுப்பினர் பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள், அப்பகுதியில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து கூட்ட நெரிசலில் பலியான இரண்டு வயது குழந்தை குரு விஷ்ணுவின் இல்லத்திற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Karur stampede Marxist Communist Party General Secretary met affected family

இதையும் படிக்க : எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாடு பாஜகவின் கட்டுப்பாட்டில் வராது! - முதல்வர்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அக்.5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்டம் கூட்டம... மேலும் பார்க்க

கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?- இபிஎஸ்

கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இராமநாதபுரம் மாவ... மேலும் பார்க்க

கைதாகிறாரா ஆனந்த்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த்தின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.Is Anand being arrested? Anticipatory bail plea rejected! மேலும் பார்க்க

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான நிலையில... மேலும் பார்க்க

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை குறைந்த நிலையில் தற்போது ரூ.480 உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் கிராமிற்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,900க்கும் ஒரு சவரன் ரூ.87,200க்கும் விற்பனை செய்யப... மேலும் பார்க்க