நீலகிரி: ஒரு மாத சிறை; 600 கிமீ தூரம்; காடு திரும்பிய யானை ராதாகிருஷ்ணன்; வனத்து...
கரூர் மரணங்கள்: விஜய்யைச் சந்திக்க வாக்கர் உதவியுடன் சென்ற இளைஞர் யார்?
கடந்த மாதம் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் விதமாக இன்று சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் சந்திக்கவுள்ளார்.
அதனையொட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆம்னி பேருந்து மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

இதில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், சேந்தமங்கலம் கிழக்கு கிராமம் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிருந்தா உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சார்ந்த அவரது கணவர் வாக்கர் உதவியுடன் ஆம்னி பேருந்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், நடிகர் விஜயைச் சந்திக்க அவரை அனுப்பி வைத்தனர்.
இவர் ஏற்கனவே விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கூட்ட நெரிசலில் தனது மனைவியைப் பறிகொடுத்த அவர், விஜயை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்த நிலையில் வாக்கர் உதவியுடன் சென்னைக்கு பேருந்தில் சென்றுள்ளார்.



















