கர்ணனில் வாளால் உருவாக்கப்பட்ட பயணம்..! தனுஷின் 56-ஆவது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!
நடிகர் தனுஷின் 56ஆவது திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
கர்ணன் திரைப்படம் வெளியாகி நான்காண்டுகள் ஆனதைத் தொடர்ந்து இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு நேற்றிரவு (ஏப்.9) வெளியானது.
இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக டாக்டர். ஐசரி கே. கணேஷன் தயாரிக்கிறார்.
கர்ணன் திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்.9இல் வெளியானது.
தற்போது, மாரி செல்வராஜ் தனது 5ஆவது படமான பைசன் என்ற படத்தை துருவ் விக்ரமை வைத்து இயக்கி வருகிறார். 6ஆவது படமாக தனுஷை இயக்குகிறார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது:
கர்ணனின் வாளால் உருவாக்கப்பட்ட பயணத்தின் 4வது ஆண்டைக் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி! இத்தனை ஆண்டுகளாக கர்ணனைக் கொண்டாடி ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
எனது அடுத்த படம் மீண்டும் என் அன்பான தனுஷுடன் என்பதைச் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!
இது நீண்ட காலமாக என் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது, மீண்டும் தனுஷுடன் கைகோர்ப்பதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்!
ஐசரி கே.கணேஷ் சாருடன் இது எனது முதல் படம். அவருடன் இணைந்ததுக்கு நான் மிகவும் மகிழ்கிறேன். இது உண்மையிலேயே ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும் என்றார்.