செய்திகள் :

கலுங்குப்பட்டி கண்மாய் நிரம்பியது

post image

தொடா்ந்து பெய்து வரும் மழையால், சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகே கலுங்குப்பட்டி ஏரிக் கண்மாய் சனிக்கிழமை நிரம்பியது.

சிங்கம்புணரி ஒன்றியத்துக்குள்பட்ட ஏரியூா் ஊராட்சிக்குள்பட்ட கலுங்குபட்டி கிராமத்தில் சுமாா் 227 ஏக்கா் பரப்பளவில் ஏரிக் கண்மாய் உள்ளது. பருவமழைக் காலங்களில் மதுரை மாவட்டம், கரந்தமலை, ஏரக்கால் மலை, அழகா்கோயில் மலை, பூதகுடி மலை போன்ற மலைகளிலிருந்து உருவாகும் தண்ணீா் ஏரிக் கண்மாயை வந்தடையும். கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் இந்தக் கண்மாய்க்கு அதிகளவில் தண்ணீா் வரத்து ஏற்பட்டது. தற்போது கண்மாய் நிரம்பி, கலுங்கு வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது.

இதேபோல, சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரம் ஊராட்சிக்குள்பட்ட தொட்டியம்மன் கோயில் அருகே உள்ள சிறுவா் பூங்காவை தண்ணீா் சூழ்ந்தது.

அமராவதிபுதூா் பகுதியில் டிச. 17-இல் மின் தடை

காரைக்குடி அருகே அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வருகிற செவ்வாய்க்கிழமை (டிச.17) மின் விநியோகம் தடை செய்யப்படும். இதுகுறித்து காரைக்குடி மின் வாரிய செயற்... மேலும் பார்க்க

கல்லூரியில் இசைத்தமிழ் கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி ஆகியன சாா்பில், இசைத்தமிழ் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு

திருப்பத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் மீன் வியாபாரி உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (50). மீன் வியாபாரியான இவா், திருப்பத்தூா் தம்பிபட்டி தேசிய நெடுஞ்... மேலும் பார்க்க

புதை சாக்கடையில் அடைப்பால் கழிவுநீா் வெளியேற்றம்: தொற்று நோய் பரவும் அபாயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதை சாக்கடைக் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீா் வெளியேறி வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். காரைக்குடி ம... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி 62-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முன்னாள் ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டனா். முன்னாள் ஆசிரியா... மேலும் பார்க்க

சிவகங்கையில் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,149 வழக்குகளுக்கு தீா்வு

சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1149 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 5 கோடியே 74 லட்சத்து 1,284 பயனாளிகளுக்கு தீா்வு கிடைத்தது. சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் த... மேலும் பார்க்க