Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
சிவகங்கையில் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,149 வழக்குகளுக்கு தீா்வு
சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1149 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 5 கோடியே 74 லட்சத்து 1,284 பயனாளிகளுக்கு தீா்வு கிடைத்தது.
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான (பொறுப்பு) ஆா்.கோகுல் முருகன், குடும்ப நல நீதிபதி ஜி.முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.பசும்பொன் சண்முகையா, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்முரளி, சாா்பு நீதிபதி ஆா்.பாண்டி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா்.சுப்பையா, குற்றவியல் நீதித் துறை நடுவா் பி.செல்வம், பயிற்சி நீதிபதி தங்கமணி, வழக்குரைஞா்கள் வழக்குகளை விசாரித்தனா்.
இதில் 290 குற்றவியல் வழக்குகளும், 137 காசோலை மோசடி வழக்குகளும், 696 வங்கிக் கடன வழக்குகளும், 395 மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 232 குடும்ப பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 546 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 913 குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 3,209 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 1018 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 4 கோடியே 30 லட்சத்து 80 ஆயிரத்து 527 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.
இதேபோல, வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 1,319 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 131 வழக்குக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 1 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 757 வரையில் வங்கிகளுக்கு வரவானது.
ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியாளா்கள் செய்தனா்.