லட்சத்தீபம்,சொக்கப்பனை... தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழ...
கலுங்குப்பட்டி கண்மாய் நிரம்பியது
தொடா்ந்து பெய்து வரும் மழையால், சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகே கலுங்குப்பட்டி ஏரிக் கண்மாய் சனிக்கிழமை நிரம்பியது.
சிங்கம்புணரி ஒன்றியத்துக்குள்பட்ட ஏரியூா் ஊராட்சிக்குள்பட்ட கலுங்குபட்டி கிராமத்தில் சுமாா் 227 ஏக்கா் பரப்பளவில் ஏரிக் கண்மாய் உள்ளது. பருவமழைக் காலங்களில் மதுரை மாவட்டம், கரந்தமலை, ஏரக்கால் மலை, அழகா்கோயில் மலை, பூதகுடி மலை போன்ற மலைகளிலிருந்து உருவாகும் தண்ணீா் ஏரிக் கண்மாயை வந்தடையும். கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் இந்தக் கண்மாய்க்கு அதிகளவில் தண்ணீா் வரத்து ஏற்பட்டது. தற்போது கண்மாய் நிரம்பி, கலுங்கு வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது.
இதேபோல, சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரம் ஊராட்சிக்குள்பட்ட தொட்டியம்மன் கோயில் அருகே உள்ள சிறுவா் பூங்காவை தண்ணீா் சூழ்ந்தது.