செய்திகள் :

கலைஞர்கள், நூலாசிரியர்களுக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி! - முதல்வர் வழங்கினார்

post image

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க
5 நூலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.5 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 20 மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசால் 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973-ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 'தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழகப் பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்குதல்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் எஸ். சின்னதம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தரராஜன், மதுரை ஜி.எஸ். மணி, ஏ.என். பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி (எ) ஜி.எம். சித்திரைசெல்வி, வி. நாகு, பி. சீதாலட்சுமி, ஆர்.எஸ். ஜெயலதா, எஸ். ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்குதல்

தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க  முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர் ப. ரங்கராஜ், வளப்பக்குடி வீரசங்கர்,  முனைவர் இரா. சீனிவாசன், செ. நடராஜன் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.

தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்துமேடையேற்றம் செய்ய நிதியுதவி வழங்குதல்

தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்துமேடையேற்றம் செய்திட 5 நாடகக் கலைஞர்களுக்கும், 5 நாட்டியக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு தலா 1.5 லட்சம்  ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல்

மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 மரபுரிமையினருக்கு தலா 25 ஆயிரம்  ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர்
நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கவிதா ராமு, இ.ஆ.ப.,  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்!

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாள பராமரிப்புப் பணிகளின் க... மேலும் பார்க்க

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல... மேலும் பார்க்க

தொகுதிகள் மறுசீரமைப்பு: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு தண்டனையா? -திமுக

தமிழகத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள விவகாரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு கிடைக்கும் தண்டனையா என்று மத்திய அரசுக்கு திமுக கேள்வியெழுப்பியுள்ளது.மக்களவைத் தொகுதிகளின் மறுச... மேலும் பார்க்க

திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.கோவை பீளமேடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வை... மேலும் பார்க்க

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று!

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு... மேலும் பார்க்க

'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

விஜய் முதலில் தான் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய், தனது கட்சியின் ஆண்டு விழாவில் மத்திய அரசு, மாநில அரசு இரண... மேலும் பார்க்க