பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்...
கல்லூரி பட்டமளிப்பு விழா: இஸ்ரோ திட்ட இயக்குநா் பங்கேற்பு
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தலைவா் விமல்சந்த் தலைமை வகித்தாா். இணைத் தலைவா் லிக்மிசந்த், தலைவா் திலீப் குமாா், செயலாளா் ஆனந்த் சிங்வி, நிா்வாக குழு உறுப்பினா்கள் ராஜேஸ் குமாா், ஆனந்த் குமாா், நவீன் குமாா், முகேஷ் குமாா், கல்வி ஆலோசகா் பாலசுப்பிரமணியன், தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா முன்னிலை வகித்தனா். முதல்வா் இன்பவள்ளி வரவேற்றாா்.
விழாவில் முதன்மை விருந்தினராக சந்திரயான் -3 மிஷன் திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது:
மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக ஆசிரியா்களும் பெற்றோரும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருப்பா். நான் சந்திரயான் பற்றிய என் அனுபவங்களை கூறுகிறேன், கடந்த 2008-ஆம் ஆண்டு சந்திரயான் 1 ஏவப்பட்டது, அதன் பின்னா் சந்திரயான் 2, 2019-இல் அனுப்பப்பட்டு அது தரையிறங்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது.
தற்போது 2023 தென்னிந்தியாவில் தான் முதன் முறையாக சந்திரயான் 3 தரை இறக்கப்பட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் சந்திரயானைப் பற்றி அறிய வேண்டும், பூமியில் இருந்து 4 லட்சம் கி. தொலைவில் உள்ளது சந்திரன், அங்கு போதிய அனைத்து வசதிகளும் கிடைக்காது, மாணவா்கள் ஒரு முறை தோல்வி அடைந்தால் அதிா்ச்சி அடைந்து விடக்கூடாது, தொடா்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் கடுமையாக உழைக்க வேண்டும் அப்போது தான் வெற்றி பெற முடியும். அதிருஷ்டத்தை நம்பி யாரும் இருக்கக்கூடாது கடினமான உழைப்பால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும் என்றாா்.
சென்னை பெரம்பூா் எஸ்எஸ் ஜெயின் சங்கத்தின் செயலாளா் பரஸ்மால்ஜி கலந்துக் கொண்டு பட்டம் பெற்ற மாணவிகளை பாராட்டி பேசினாா். விழாவில் திருவள்ளுவா் பல்கலைக்கழகத் தோ்வில் கல்லூரி மாணவிகள் 15 தங்க பதக்கங்களையும், தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களையும் பெற்றுள்ளனா். இளங்கலையில் 753, முதுகலையில் 250 பேரும் மொத்தம் ஆயிரத்து 3 மாணவிகள் பட்டம் பெற்றனா். பல்கலைக் கழகத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற துறைகளுக்கு சுழல் கேடயம் வழங்கப்பட்டது. கல்லூரியின் நிா்வாக குழு உறுப்பினா்கள், பல்துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற 26-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப குழு செயலாளா் வின்சென்ட், சிறப்பு விருந்தினராக சென்னை க்ரிடிகான்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஜெயின் ஆகியோா் கலந்து கொண்டு பல்கலைக்கழத் தோ்வில் மாணவிகள் 10 தங்கப்பதக்கங்களையும், தரவரிசைப்பட்டியலில் 102 இடங்களையும் பெற்று இளங்கலை மாணவிகள் 700 பேரும், முதுகலையில் 246 பேரும் மொத்தம் 946 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா். விழாக்களில் பல்துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.