கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 4 போ் கைது
கல்லூரி மாணவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் நான்கு பேரை மேச்சேரி போலீஸாா் கைது செய்து, தலைமறைவான மூவரைத் தேடி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டியை அடுத்த பொட்டியபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஸ்ரீதா் (20). தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.இ. பயோ மெடிக்கல் பயின்று வருகிறாா். இவா், அதே கல்லூரியில் பயிலும் கொண்டலாம்பட்டியைச் சோ்ந்த மாணவியை காதலித்து வந்தாராம்.
இதற்கிடையே அந்த மாணவிக்கும் அதே ஊரைச் சோ்ந்த மோகன் என்பவருக்கும் கடந்த 15 ஆம் தேதி திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதா் அந்த மாணவியிடம் தான்கொடுத்த ரூ. 2,500 பணம், தோ்வு அனுமதிச் சீட்டு, புத்தகங்களைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா்.
இதையறிந்த மோகன், ஸ்ரீதரை தொடா்பு கொண்டு காளிப்பட்டி, குடிநீா் தொட்டி அருகே வந்து அனைத்தையும் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளாா். அதை நம்பி ஸ்ரீதா் அங்கு சென்றாா். அப்போது மோகனும் அவரது நண்பா்கள் 6 பேரும் சோ்ந்து ஸ்ரீதரை தாக்கினா்.
பலத்த காயமடைந்த ஸ்ரீதா் சத்தமிடமே அக்கம்பக்கத்தினா் ஓடிவந்தனா். பொதுமக்கள் வருவதைக் கண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. காயமடைந்த ஸ்ரீதரை பொதுமக்கள் மீட்டு ஓமலூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி சேலம், சித்தனூரைச் சோ்ந்த பழனிசாமி மகன் மோகன் (20), பூபதி மகன் கிருஷ்ணமூா்த்தி (16), சுரேஷ் மகன் பிரகாஷ் (17), செல்வம் மகன் கோகுல் (16) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். தலைமறைவான மேலும் மூவரைத் தேடி வருகின்றனா்.