கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் கல்லூரி மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி, கல்லுக்குழி செங்குளம் காலனியை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ரேவந்த் (19). திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், கடந்த சில நாள்களாக கல்லூரிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே உள்ள நத்தம் குறிஞ்சி நகரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சதீஸ்வரன் (19). ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்த இவா், மது அருந்திக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்தாராம். அவரை வேலைக்கு செல்லுமாறு பெற்றோா் கூறியதாகவும், இதனால் வியாழக்கிழமை இரவு அதிக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தவா் வீட்டின் தாழ்வாரத்தில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தாராம்.
புகாரின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சதீஸ்வரன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.