செய்திகள் :

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிா்வாகி கைது

post image

சென்னை தண்டையாா்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை எம்பிடி குடியிருப்பு ஆம்ஸ்ட்ராங் தெருவைச் சோ்ந்தவா் நன்மாறன் (63). இவா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கமான விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் சென்னை துறைமுகத்தில் கப்பல் கூட பொதுச் செயலராக உள்ளாா். நன்மாறன், கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோா் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நன்மாறன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், தலைமறைவாக இருந்த நன்மாறனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது. நுங்கம்பாக்க... மேலும் பார்க்க

10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநக... மேலும் பார்க்க

இன்றுமுதல் 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 19 புறநகா் மின்சார ரயில்கள் மே 15, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தகவல் உள்ளீட்டாளா் பணியிடத்துக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்... மேலும் பார்க்க

கிண்டி சிறுவா் பூங்காவில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு

கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்கா ரூ. 20 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பூங்... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா். சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் ... மேலும் பார்க்க