செய்திகள் :

கல்வித் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

post image

தமிழக நிதிநிலை அறிக்கையை பார்த்தவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும், பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது.

தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கும், உயர் கல்விக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத்தின் வருங்கால தலைமுறையினர் நல்ல கல்வித் தகுதியோடு வெளிவருவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது.

அந்த வகையில், இந்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.46,767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று வெளியான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர்கல்விக்கும் வெளியான அறிவிப்புகள்..

சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.

ரூ.3,796 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த சூழ்நிலையிலும், அரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி மாநில அரசே நிதியை விடுவித்துள்ளது. தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.

ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம். அதற்காக ரு.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதையும் படிக்க.. தமிழக அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் - முழு விவரம்

ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!

ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!

ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு!

காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி!

ஐந்து ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கை

அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும்.

வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள்.

ஏஐ உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.

அரச பொறியியல் கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

பள்ளிப் பாடத் திட்டத்தில் சதுரங்கம் விளையாட்டு சேர்க்கப்படும்.

குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை.

ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க உறுதி செய்வோம்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு!

அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்! அமைக்கப்படும். இதன் மூலம் 1,308 மாணவர்கள் பயன்!

கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் வரை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவலான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்: துணை முதல்வர் உதயநிதி

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற உயரிய லட்சியத்தோடு தமிழ்நாட்டிற்க... மேலும் பார்க்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச். 18 அன்று நடத்தப்... மேலும் பார்க்க

நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் தமிழகத்தின் வரவு - செலவு கணக்கு!

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு வரும் வருவாய் மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் இன்று வெளியாகி... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்த தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் யாருக்கு? மட்சுவோ பாஷோ யார்?

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டது.பெற்றோரை இழந்து, வறிய நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் குழ... மேலும் பார்க்க