நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி
கல்வி துறை இணைப்பு கட்டணத்தை தமிழக அரசு கட்டமுடியலில்லையா?அண்ணாமலை
ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ. 1.50 கோடியைக் கட்ட முடியவில்லையா என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழகப் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான கட்டண பாக்கியை உடனே கட்டவில்லையென்றால், இணைய இணைப்பு துண்டிக்கப்படும் என்று கடிதம் வந்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில், பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ. 5,858.32 கோடி. சமக்ர சிக்ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவோம் என்று கடிதம் அளித்து விட்டு, பல திட்டங்களை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது திமுக அரசு என்று அவா் பதிவிட்டுள்ளாா்.