செய்திகள் :

கள்ளக்குறிச்சி: `முட்டைப் பொரியலில் விஷம் வச்சுட்டேன்' - காதலை கைவிட மறுத்த மகள்; தாய் செய்த கொடூரம்

post image
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அதே பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.

இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேச ஆரம்பித்திருக்கின்றனர். சாந்தி தினமும் சாய்குமாருடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசிக் கொண்டும், வாட்ஸ்-அப் சாட்டிலும் இருந்ததால், சாந்தியின் அம்மா அதுகுறித்துக் கேட்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம்

அப்போது அந்த நபரைக் காதலிப்பதாக சாந்தி கூற, அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அந்தக் காதலை விட்டுவிடுமாறும், படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருக்கிறார் அவரின் அம்மா. ஆனால் காதலை விட முடியாது என்று கூறிய சாந்தி, அவருடன் தினமும் பேசி வந்திருக்கிறார். அதில் கோபமடைந்த சாந்தியின் அம்மா, சாந்தியைக் கொலை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி நேற்று முன் தினம் சாந்திக்குப் பிடித்தமான முட்டைப் பொரியல் செய்த சாந்தியின் அம்மா, அதில் எலி மருந்தைக் கலந்து மகளுக்குக் கொடுத்திருக்கிறார். சாந்தியும் அதை முழுமையாகச் சாப்பிட்டு தன் அம்மாவுடன் எப்போதும்போல சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது என்ன காரணத்தாலோ, `நீ சாப்பிட்ட முட்டைப் பொரியலில் எலி மருந்து கலந்துட்டேன்’ என்று மகள் சாந்தியிடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சாந்தி, `என்னம்மா இப்படி பண்ணிட்டியே. நான் உன் பொண்ணுதானம்மா…’ என்று கேட்டவாறே மயங்கி விழுந்திருக்கிறார்.

அதையடுத்து சாந்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சாந்தியிடம் பெற்ற புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருக்கும் சங்கராபுரம் போலீஸார், தாயைக் கைது செய்திருக்கின்றனர்.

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அட... மேலும் பார்க்க

மும்பையை சுற்றிப்பார்க்க வந்த பெண்; இடமில்லாமல் ரயிலில் உறங்கிய போது பாலியல் வன்கொடுமை..

மும்பையில் தாதர், பாந்த்ரா, மும்பை சென்ட்ரல், குர்லா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற இடங்களில் ரயில்வே டெர்மினஸ் இருக்கிறது. இதில், பாந்த்ரா ரயில்வே டெர்மினஸில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலில் உற... மேலும் பார்க்க

வேங்கை வயல் வழக்கில் CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு; வேறு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்..

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாகவும், அதனை ஏற்கக் கூடாது எனவும் புகார் தரரான கனகராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் ... மேலும் பார்க்க

``மிரட்டல், சித்ரவதையால் தளர்ந்துவிட்டேன்..'' -உறவின் போது காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் இக்பால்(32). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்தது. இந்நிலையில், இக்பால் அவரது வீட்டிற்கு அருகில் பிணமாக கிடந்தது ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி கொடுத்த முகமூடி ஆசாமிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் பெட்ரோல்... மேலும் பார்க்க

மதுபோதை ஒழிப்பு பேரணிக்குள் நுழைந்த கார்; போதையில் கார் ஓட்டிய தவெக முன்னாள் நிர்வாகி மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.போட்டி தொடங்கியதும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு ஓடினர்.... மேலும் பார்க்க