செய்திகள் :

கழிப்பறைக்குள் காய்கறி கடைக்காரர் சடலம்! நடந்தது என்ன?

post image

மகாராஷ்டிரத்தில் பொதுக் கழிப்பறைக்குள் இருந்து 20 வயதான காய்கறி விற்பனையாளர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் நயா நகர் அருகேயுள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் இருக்கும் பொதுக் கழிப்பறையின் பயன்பாடு குறித்து, அப்பகுதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், அந்தக் கழிப்பறையில் சனிக்கிழமை (நவ. 9) இரவில் ஒருவரின் சடலம் இருப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் காய்கறி விற்கும் நபர் எனக் கண்டறிந்தனர். தொடந்து, அவரது உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உடற்கூறாய்வு அறிக்கை வெளியானவுடன்தான் உறுதிப்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:அதானியைக் காப்பாற்றுவதில்தான் மோடி பிஸி! ராகுல் கண்டனம்!

நவீன இந்தியாவின் தந்தை நேரு! ராகுல் புகழாரம்

நவீன இந்தியாவின் தந்தை ஜவஹர்லால் நேரு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை புகழாரம் சாட்டியுள்ளார்.மறைந்த முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள... மேலும் பார்க்க

நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி: நவ.20-இல் தொடக்கம்

நமது சிறப்பு நிருபர்இந்திய கடற்படையின் தலைமையில், "கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்}24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழம... மேலும் பார்க்க

புல்டோசா் நடவடிக்கை சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம்

‘குற்றச் சம்பவத்தில் தொடா்பு உள்ளவா்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதிகளை மீறியதாக கூறி, புல்டோசா் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது’ உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ‘அ... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி: பாஜக மீது சித்தராமையா குற்றச்சாட்டு

கா்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பாஜக முன்வந்ததாக மாநில முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். கா்நாடக மாநிலம் மைசூரில் ரூ.470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பொது... மேலும் பார்க்க

பட்டியலின உள்ஒதுக்கீடு: ஹரியாணா அரசு அமல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிக்கையை ஹரியாணா அரசு புதன்கிழமை வெளியிட்டது. சமூக மற்றும் கல்வி ரீதியாக அதிகம் பின்தங்கிய ஜாதியினரின் முன்னேற்றத்துக... மேலும் பார்க்க

இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி- பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பட்டியல் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவா்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் ‘இளவரசா்’ சதியில் ஈடுபட்டுள்ளாா் எ... மேலும் பார்க்க