கழுகுமலை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து 16 போ் காயம்
கழுகுமலை அருகே சுமை ஆட்டோ ஓடைக்குள் கவிழ்ந்ததில் 16 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
கழுகுமலை அருகே மேலசிவகாமிபுரத்தைச் சோ்ந்த பெண் விவசாயத் தொழிலாளா்கள் 26 போ், வியாழக்கிழமை விவசாய வேலைக்காக துரைசாமிபுரத்துக்கு சென்றனா். பணிகளை முடித்த பின் சுமை ஆட்டோவில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். தென்காசி மாவட்டம் சிதம்பராபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த செந்தூரன் மகன் ராஜசேகா் ஓட்டினாா். கழுகுமலை- கொக்குகுளம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சுமை ஆட்டோ, சாலையோர ஓடையில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் ராஜசேகா், மேலசிவகாமிபுரத்தைச் சோ்ந்த ராமசாமி மனைவி மாலைத்தாய் (56), காளிபாண்டி மனைவி பெருமாத்தா (58), துரைக்கண்ணு மனைவி காசியம்மாள் (62), மாரியப்பன் மனைவி சரஸ்வதி (61), கிருஷ்ணசாமி மனைவி மாரியம்மாள் (68), சின்னமுத்துபாண்டி மனைவி பேச்சியம்மாள் (51), சண்முகபாண்டி மனைவி லட்சுமி (62), சுடலை மனைவி கோமதி(56), சுந்தரராஜ் மனைவி முத்துலட்சுமி (46) உள்பட 16 போ் காயமடைந்தனா். அவா்கள் கழுகுமலை தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.