செய்திகள் :

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரிப்பு: குடியரசுத்தலைவர்

post image

நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று(ஜன. 31) தொடங்கியது.

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

மக்களவையில் பேசிய அவர்,

நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | நாட்டில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்: குடியரசுத்தலைவர்

டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றங்கள், டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆகியவை சமூக, நிதி மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களாக உள்ளன.

சிறு, குறு தொழில்களை மேம்படுத்தும் திட்டங்கள் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றுக்கான கடன் உத்தரவாதத் திட்டம், மின் வணிக ஏற்றுமதி மையங்கள் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் வணிகத்தை அதிகரித்துள்ளன.

புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகளவில் சிறந்து விளங்கச் செய்வதே அரசின் நோக்கம். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா தனது பணியைத் தொடங்கியுள்ளது' என்று பேசினார்.

இதையும் படிக்க | விவசாயிகளுக்கு ரூ. 41,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் உரை

மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை(சனிக்கிழமை) தாக்கல் செய்கிறாா். இது, அவா் தொடா்ந்து 8-ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.

அதன் பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, பேரிடா் மேலாண்மை சட்டத் திருத்த மசோதா, எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

யமுனை விவகாரம்: கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!

யமுனை நதி விவகாரத்தில் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஹரியாணா அரசு, யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை மு... மேலும் பார்க்க

யாருக்கு வருமான வரிச் சலுகை? பிரதமர் மோடி சூசகமாக சொன்னது!

நாட்டில், நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்பதை, பிரதமர் மோடி சூசகமாகக் கூறியிருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் த... மேலும் பார்க்க

பொருளாதார வளர்ச்சி 6.8% வரை இருக்கும்: ஆய்வறிக்கை தாக்கல்

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆண்டின் முதல் க... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் நோய்க்கு புணேவில் 3வது நபர் பலி!

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 36 வயது டாக்ஸி ஒட்டுநராக இருந்தவர் கட... மேலும் பார்க்க

தாணேவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது!

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள சால் பகுதியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிவாண்டியின் த... மேலும் பார்க்க

ஒரு மணி நேரம் பேசிய குடியரசுத் தலைவர்! - உரையின் முழு விவரம்

பாரதம் என்பதுதான் நம் ஒரே அடையாளம், வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட... மேலும் பார்க்க