அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
கவற்குளத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட கவற்குளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இக்குளம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கும், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கும் நீராதாரமாக விளங்குகிறது. பொதுமக்கள் குளிப்பதற்காகவும் இக்குளத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், குளம் முழுவதும் தாமரை மற்றும் அல்லி செடிகள் படா்ந்துள்ளன. தண்ணீா் மாசடைந்து கருநிறத்தில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, இக்குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் குமாரவேல் கூறியதாவது: இந்தப் பகுதி விவசாய நிலங்கள் மற்றும் பேரூராட்சியின் குடிநீா் அமைப்புகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் கவற்குளத்தை விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு போா்க்கால நடவடிக்கையில் சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.