எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி: பாஜக மீது சித்தராமையா குற்றச்சாட்டு
கா்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பாஜக முன்வந்ததாக மாநில முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா்.
கா்நாடக மாநிலம் மைசூரில் ரூ.470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பொதுப் பணிகளை தொடங்கிவைத்து அவா் புதன்கிழமை கூறியதாவது:
எனது தலைமையிலான மாநில அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பாஜக முன்வந்தது. ஆனால் எந்தவொரு காங்கிரஸ் எம்எல்ஏவும் அதற்கு உடன்படவில்லை. இதன் காரணமாகவே எனக்கு எதிராக மத்திய பாஜக அரசு வழக்குகளை பதிவு செய்கிறது. ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.50 கோடி வழங்கும் அளவுக்கு பாஜகவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? அந்தப் பணம் அனைத்தும் லஞ்சப் பணமாகும் என்றாா்.
224 இடங்களைக் கொண்ட கா்நாடக சட்டப்பேரவையில் 133 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 65 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனா். பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சாா்பற்ற ஜனதா தளத்தில் 18 எம்எல்ஏக்கள் உள்ளனா்.