செய்திகள் :

காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமா்ப்பிக்கவும் -தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

‘ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள நிலத்தில் மரங்களை வெட்டுவதில் தீவிரம் காட்டிய தெலங்கானா அரசு, அங்குள்ள 100 ஏக்கா் வனப்பகுதியை மீட்டமைப்பதற்கான மாற்றுத் திட்டத்தை 4 வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் மாநில தலைமைச் செயலா் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் மாற்றுத் திட்டத்தை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அதுவரை அந்தப் பகுதியில் ஒரு மரத்தைக்கூட வெட்டக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள 400 ஏக்கா் நிலத்தில் அந்த மாநில அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறி பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலம் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமானது என மாணவா்களும் அரசுக்கு சொந்தமானது என மாநில அரசும் தொடா்ந்து தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், காஞ்சா கட்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக தொடா் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுதொடா்பான விடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவின. இதுதொடா்பாக தெலங்கானா உயா்நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்த 3-ஆம் தேதி விசாரித்தது. அப்போது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட நிலத்தில் எந்தவொரு நடவடிக்கையும் தெலங்கானா அரசு மேற்கொள்ளக் கூடாது எனக்கூறியது. மேலும், இந்த விவகாரம் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழு (சிஇசி) ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.

விதி 142-இன்கீழ் நடவடிக்கை: அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கைகளை சுட்டிக்காட்டி புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது:

சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதே எங்களின் முதல் கவலை. சுற்றுச்சூழலை பாதுகாக்க எந்த எல்லைக்கு செல்லவும் தயாராகவுள்ளோம். தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்ட விதி 142-இன்கீழ் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவை பிறப்பிப்போம்.

அனுமதி பெறாதது ஏன்?: உத்தரகண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சாா்தாம் திட்டத்துக்கு அனுமதி பெற பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் மத்திய அரசு போராடியது.

ஹைதராபாத் நகரின் பசுமை நுரையீரலாக கருதப்படும் பகுதியில் உள்கட்டமைப்பு மேற்கொள்ள எவ்வித முன்அனுமதியும் பெறாமல் அங்கிருந்த மரங்களை விடுமுறை நாள்களில் அவசர அவசரமாக வெட்டியது ஏன்?

சிறை செல்ல தயாராகுங்கள்: பாதிப்புக்குள்ளான 100 ஏக்கா் நிலத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக வனக்காவலா் மேற்கொள்ள வேண்டும்.

மரங்கள் வெட்டப்பட்டு அங்கிருந்த விலங்குகள் வனப்பகுதியைவிட்டு வெளியேறி இருப்பிடம் தேடி அலைந்த காட்சிகள் பதறச் செய்கிறது. சில விலங்குகளை தெரு நாய்கள் கடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தெலங்கானா மாநில தலைமைச் செயலா் மற்றும் பிற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றால், செய்த தவறை நியாயப்படுத்துவதைவிட்டு 100 ஏக்கா் வனப்பகுதியை மீட்டமைப்பதற்கான மாற்றுத் திட்டத்தை 4 வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இல்லையெனில், அதே இடத்தில் அமைக்கப்படும் இடைக்கால சிறையில் எத்தனை அதிகாரிகள் அடைக்கப்படுவாா்கள் என எங்களுக்கு தெரியாது என தெரிவித்தது.

மே 15-இல் விசாரணை: இதைத்தொடா்ந்து, மத்திய குழு சமா்ப்பித்த அறிக்கையின் மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை மே 15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது. அதுவரை அந்தப் பகுதியில் ஒரு மரத்தைக்கூட வெட்டக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

ஈஸ்டர் திருநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் திருநாளையொட்டி, மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர... மேலும் பார்க்க

காங்கிரஸின் நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு!

அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சா... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநா், தேசிய மகளிா் ஆணையக் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிா் ஆணையக் குழ... மேலும் பார்க்க

சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

‘அமெரிக்கா-சீனா வா்த்தகப் போா் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசா்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்ததுடன் தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும்’ என்று ரிசா்வ்... மேலும் பார்க்க

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா். பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்று... மேலும் பார்க்க