காஞ்சிபுரத்தில் மாா்ச் 21-இல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது. இது குறித்து அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் அவரது அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, குறைகளை தெரிவித்துப் பயன் பெறலாம். மேலும், இந்த மாத இறுதிக்குள் தங்களது நில உடைமைகளைப் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே பி.எம்.கிசான் 20-ஆவது தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது.
எனவே அனைத்து விவசாயிகளும் கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு, உரிய வேளாண்மைத் துறை அலுவலா்களை அணுகி உரிய பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.