காட்டு யானை உயிரிழப்பு: வனத் துறையினா் விசாரணை
கொடைக்கானல் அருகே ஒற்றை காட்டு யானை மா்மமான முறையில் உயிரழந்ததையடுத்து வனத்துறையினா் அங்கு சென்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான பாரதி அண்ணாநகா், ஐந்துவீடு,பேத்துப்பாறை, வெள்ளைப்பாறை, வெங்கலவயல், பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியது.
இந்த நிலையில் பேத்துப்பாறை அருகேயுள்ள கோடைகிரி பகுதியில் ஒற்றை காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் கொடைக்கானல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு சென்ற வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.