நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
காந்தாரா - 2 படப்பிடிப்பில் 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்பு!
காந்தாரா - 1 படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிக்க: இணையத்தில் கசிந்த பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள்!
காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக இப்படத்தைக் கொண்டு வர ரிஷப் ஷெட்டி திட்டமிட்டுள்ளதால் பான் இந்திய வெளியீடாக உருவாகிறது.
தற்போது, கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஹெரூர் என்கிற கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒரு போர் காட்சிக்காக 500 சண்டைக் கலைஞர்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.