கான்பூர் ஐஐடி-இல் வேலை வேண்டுமா?
கான்பூர் ஐஐடி- இல் இளநிலை உதவியாளர் மற்றும் உதவி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 1/2024
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Security Officer - 2
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் துணை ராணுவப் படை, காவல்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Sports Officer - 2
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் உடற்கல்வியியல் பிரிவில் பி.பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Technical Superintendent - 3
1.Computer Science & Engineering -2
2.Acdamic Affairs - 1
தகுதி: கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளங்கலை பட்டத்துடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 12
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா?ரூ.1,80,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் ரூ.350, இதர பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.iitk.ac.in/infocell/recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025
இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.