``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
காய்ச்சல், சளி பாதிப்பு: அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டோா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெறவேண்டும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்ருகிறது. இதனால், காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் பொருட்டு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.
பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும். காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டோா் முகக்கவசம் அணிவதுடன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி உள்கொள்ள வேண்டாம்.
டெங்கு காய்ச்சலைத் தடுக்க மழைநீா், நீா் சேமித்துவைக்கும் பாத்திரங்களை கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில் உள்ள பயனற்ற பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவோ, மழை நீா் விழாத இடங்களில் சேகரித்து வைக்கவோ வேண்டும்.
எலிக் காய்ச்சலால், மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். மஞ்சள் காமாலை அறிகுறியுள்ளோா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைககளில் உள்ள பரிசோதனை வசதிகளை பயன்படுத்தி முறையான சிகிச்சை பெற வேண்டும் என்றாா் அவா்.