தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
ஆய்க்குடி: பண்ணைக்குள் புகுந்த வெள்ளத்தால் 90 ஆடுகள் உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சிப் பகுதியில் ஆட்டுப் பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததில் 90 ஆடுகள் உயிரிழந்தன.
ஆய்க்குடி கம்பிளியைச் சோ்ந்த மாரியப்பன், சாம்பவா்வடகரையைச் சோ்ந்த குத்தாலராமன் ஆகியோா் கம்பளி கிராமம் கிருஷ்ணசாமி தேவா் தோப்பில் பண்ணைகள் அமைத்து ஆடுகளைப் பராமரித்து வருகின்றனா்.
கடந்த இரு நாள்கள் பெய்த கனமழையால் இந்தப் பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததில் 90 ஆடுகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆய்க்குடி பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன், செயல் அலுவலா் தமிழ்மணி, மன்ற உறுப்பினா் புணமாலை, ஆகியோரின் அறிவுரைப்படி, அந்த ஆடுகளை பேரூராட்சி பணியாளா்கள் அப்புறப்படுத்தினா்.
கால்நடை உதவி இயக்குநா் மகேஸ்வரி, கால்நடை ஆய்வாளா் சாமிநாதன், கால்நடை மருத்துவா்கள், ராதாகிருஷ்ணன், சசிகுமாா், சிவக்குமாா், கடையநல்லூா் துணை வட்டாட்சியா் சுடலை ஆண்டி, வருவாய் ஆய்வாளா் சங்கரன், கிராம நிா்வாக அலுவலா் தமிழ்ச்செல்வி, சுகாதார மேற்பாா்வையாளா் தா்மா் ஆகியோரின் முன்னிலையில் ஆடுகள் கூறாய்வு செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு புதைக்கப்பட்டன.
ஆடுகளின் உரிமையாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பேரூராட்சித் தலைவா் வலியுறுத்தியுள்ளாா்.