தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
ஆலங்குளத்தில் டிச.19 இல் அனைத்து கட்சி உண்ணாவிரதம்!
ஆலங்குளத்தில் வியாழக்கிழமை (டிச.19) அனைத்து கட்சியினா் உண்ணாவிரதம் இருக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலை ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் பகுதி தொட்டியான் குளம் கரையில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பாலத்தால் சாலையின் பின்புறம் உள்ள 500 குடியிருப்புகள், 3 பள்ளிகள், ஐந்துக்கும் மேற்பட்ட தகன மேடைகள் ஆகியவற்றுக்கு தக்க பாதையுடன் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது என ஆலங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக, அதிமுக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.