Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?
காலிறுதியில் அடிதடி: மெஸ்ஸி மேஜிக்கால் அரையிறுதிக்கு முன்னேறிய இன்டர் மியாமி!
வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிளப்புகளுக்காக கான்காகாஃப் (CONCACAF) சாம்பியன்ஸ் என்ற பெயரில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காலிறுதியின் 2ஆவது கட்ட போட்டியில் இண்டர் மியாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் அணி மோதின.
முதல் கட்ட காலிறுதியில் 1-0 என லாஸ் ஏஞ்சல்ஸ் முன்னிலை வகித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் 9ஆவது நிமிஷத்தில் லாஸ் ஏஞ்சல்ஸஸின் ஆரோன் லாங்க் கோல் அடித்து அசத்தினார்.
மெஸ்ஸி மேஜிக்
பின்னர் இன்டர் மியாமியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 35ஆவது நிமிஷத்தில் தனக்கே உரிய கடினமான சூழலில் தனது இடது காலினால் கோல் அடித்தார்.
பின்னர், 61ஆவது நிமிஷத்தில் இன்டர் மியாமி சார்பாக பெட்ரிகோ ரெடோன்டா கோல் அடித்தார்.
84ஆவது நிமிஷத்தில் எதிரணியினர் பந்தினை கையால் தொட்டதால் மெஸ்ஸிக்கு கிடைத்த பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில் 3-1 என இன்டர் மியாமி வென்றது. மொத்தமாக 3-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மோதலில் ஈடுபட்ட ஏஞ்சல்ஸ் வீரர்கள்
இந்தப் போட்டியில் மெஸ்ஸியை வேண்டுமென்றே லாஸ் ஏஞ்சல்ஸஸின் வீரர்கள் இடித்தார்கள். இதனால் இரு அணியினருக்கும் சண்டை ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் அணியினருக்கு 3 மஞ்சள் கார்டுகள் கொடுக்கப்பட்டன.
61 சதவிகிதம் பந்தினை கட்டுக்குள் வைத்திருந்த இண்டர் மியாமி அணி 85 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்தார்கள்.
குறிப்பாக இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி-சௌரஸ் கூட்டணி சிறப்பாக இருந்தன.
HAD TO BE HIM pic.twitter.com/oJwaAgcUnG
— Inter Miami CF (@InterMiamiCF) April 10, 2025