செய்திகள் :

காளையின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

post image

மும்பை: ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதன் காரணமாக, இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 119 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 44.80 சரிந்து 25,069.20 புள்ளிகளாக நிலைபெற்று தனது வெற்றிப் பயணத்தை முடித்து கொண்டன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 81,998.51 புள்ளிகளுடனும் பிறகு குறைந்தபட்சமாக 81,744.70 புள்ளிகளை எட்டிய நிலையில் தனது ஐந்து நாள் பேரணியை முடித்து கொண்டு சென்செக்ஸ் 0.15 சதவிகிதம் சரிந்து முடிவில் 81,785.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.

50 பங்குகள் கொண்ட நிஃப்டி 0.18 சதவிகிதம் சரிந்து 25,069.20 புள்ளிகளில் முடிவடைந்தது, அது அதன் எட்டு நாட்கள் ஏற்றத்தை நிறுத்தியது.

இன்றைய வர்த்தகத்தில் 3,165 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,711 பங்குகள் உயர்ந்தும் 1,356 பங்குகள் சரிந்தும் 98 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன. அதே வேளையில் 91 பங்குகள் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

இந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கைக் கூட்டத்தின் முடிவுக்காக சந்தைகள் காத்திருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் சற்று ஒதுங்கியே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டைட்டன், சன் பார்மா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகியவை சரிந்தும் பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

ஃபெட் கொள்கை கூட்டத்திற்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், பெஞ்ச்மார்க் குறியீடுகள் பெரும்பாலும் சமமாக வர்த்தகமானது. கடந்த வார ஏற்றத்திற்குப் பிறகு ஐடி குறியீடு லாப முன்பதிவைக் கண்டது. 25-பிபிஎஸ் விகிதக் குறைப்பு பெரும்பாலும் இருக்கலாம் என்றும் பெரும்பாலும் அதன் வழிகாட்டுதலுக்காக சந்தைகள் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் உயர்ந்தும் அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தது. ஜப்பானின் பங்குச் சந்தை விடுமுறைக்காக மூடப்பட்டது.

ஐரோப்பாவில் சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் செப்டம்பர் 12 (வெள்ளிக்கிழமை) அன்று கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.48 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.31 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரூ.129.58 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

புதுதில்லி: உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவிகிதமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் குறித்த கவலைகள் மற்றும் வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கைகளுக்கு இடையில், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 6 காசுகள் உயர்ந்த... மேலும் பார்க்க

ஆட்டோ பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

பங்குச் சந்தைகள் இன்று(திங்கள்கிழமை) சரிவுடன் தொடங்கிய நிலையில் தற்போது ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,925.51 என்ற புள்ளிகளில் ஏற்... மேலும் பார்க்க

ஐபோன் 17 ஏர்: செப்.19 முதல் இந்தியாவில் விற்பனை!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 ஏர் மாடலை அறிமுகப்படுதியுள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்லிம் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். தனது தயாரிப்புகளில் புதுவித மாடல்களை அளித்துப் புரட்சியை ஏற... மேலும் பார்க்க

விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: டிவிஎஸ் மோட்டார் தேவை அதிகரிப்பு!

கொல்கத்தா: ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புக்கு பிறகு தேவையை அதிகரிக்கும் என்றது டிவிஎஸ் மோட்டார்ஸ்.புதிய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு, டிவிஎஸ் 150 சிசி ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க