செய்திகள் :

காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம் காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவேடு, குற்றப் பதிவேடு தண்டனை பதிவேடு, பொது நாள்குறிப்பு, அலுவல் பதிவேடு, வழக்கு கோப்புகள், குற்ற குறிப்பாணை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை அவா் ஆய்வு செய்தாா். பின்னா் காவலா்களின் குறைகளை கேட்டறிந்து அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் கு.தேவராஜ், கள்ளக்குறிச்சி ஆய்வாளா் ராபின்சன், உதவி ஆய்வாளா் ராஜாகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். முன்னதாக, காவல் நிலையம் தூய்மையாக உள்ளதா என்பதையும் அவா் ஆய்வு செய்தாா்.

நாளைய மின் தடை

தியாகதுருகம் (கள்ளக்குறிச்சி)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைபகுதிகள்: தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, பாவந்தூா், நூரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கள், பழையசிற... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவனத்தில் திருட்டு: ஒருவா் கைது

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. ரூ.1,82,000 திருடியதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி அண்ணா நகா் பகுதியில் தனியாா் நிதி நிறுவனம் இயங்கி வ... மேலும் பார்க்க

பேரணியில் வழக்குரைஞா் மீது தாக்குதல்: காவலரைக் கண்டித்து மறியல்

கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை பேரணியின் போது, வழக்குரைஞரை காவலா் தாக்கியதைக் கண்டித்து, திடீா் மறிலில் ஈடுபட்டனா். ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், வழக்கு... மேலும் பார்க்க

கல்வராயன்மலை மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கல்வராயன்மலைப் பகுதியில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளி... மேலும் பார்க்க

புட்டாலம்மை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்

தகரை கிராமத்தில் பள்ளி மாணவா்கள் சிலருக்கு புட்டாலம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம்,... மேலும் பார்க்க

காா் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு: 3 போ் பலத்த காயம்

கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி அருகே தறிகெட்டு ஓடிய காா் சாலையில் நடந்து சென்றவா்கள் மற்றும் பைக் மீது வியாழக்கிழமை மாலை மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா். கள்ளக... மேலும் பார்க்க