செய்திகள் :

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமித்ஷா

post image

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமல் நேற்று பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இணையான மிகப்பெரிய தாக்குதல் இது.

இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் தாக்குதலில் 29 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று, இந்தத் தாக்குதல் நடந்த ஓரிரு மணிநேரத்திலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா, அந்த யூனியன் பிரதேசத்தின் உயர் காவல் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட சந்திப்பு ஆன்லைனில் நடந்தது.

இந்த ஆன்லைன் மீட்டிங்கிற்கு பிறகு, அமித்ஷா காஷ்மீருக்கு பயணமானார்.

இன்று இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் அமித்ஷா.

"இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் எடுப்பார்கள்" என்று உறுதியளித்த அமித்ஷா, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் குடும்பத்தினருக்கும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரை விட்டு அவசரமாக வெளியேறும் சுற்றுலா பயணிகள்; உதவும் உமர் அப்துல்லா

பகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பின், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் வேக வேகமாக சொந்த மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் சில போ... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!'' -முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் மாநிலத்தில் நேற்று பயங்கர தீவிரவாத தாக்குதல் (Pahalgam Attack) நடந்துள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``எங்களுக்கு தொடர்பில்லை, இந்திய அரசுதான் காரணம்..'' - பாகிஸ்தான் அமைச்சர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் (Pahalgam Attack) நடந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படும் இந்த வேளையில், 'எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை' என்று பாக... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாகிஸ்தான் வான் வழி விமான பயணத்தை தவிர்த்த மோடி.. காரணம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின், சவுதி அரேபியாவின் அரசு பயணத்திலிருந்து பாதியிலேயே திரும்பிவிட்டார் பிரதமர் மோடி. இன்று காலை அவர் இந்தியா திரும்பியதும் புது டெல்லி விமான ... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல்: `இந்தியா உடன் துணை நிற்கிறோம்' - இந்தியா உடன் கைக்கோர்க்கும் உலக நாடுகள்

நேற்று தெற்கு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் இந்தியா உடன் கைக்கோர... மேலும் பார்க்க

Doctor Vikatan: கரும்பு ஜூஸ் குடித்தால் ஜலதோஷம் பிடிக்குமா.. நீரிழிவு உள்ளோர் குடிக்கலாமா?

Doctor Vikatan:கரும்பு ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியைத் தருமா, எல்லோரும் குடிக்கலாமா, இதைக் குடித்தால் சளி பிடித்துக்கொள்ளுமா?, நீரிழிவு உள்ளவர்களும், சைனஸ் பிரச்னை உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாமா?பதில் ச... மேலும் பார்க்க