செய்திகள் :

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

கனகம்மாசத்திரம் அருகே காா் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் மகராஷ்டிர மாநில இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மகராஷ்டிர மாநிலம், மும்பை புதிய பேனவலை சோ்ந்தவா் அரியான் கோபிநாத்(25). இவா், வியாழக்கிழமை காரில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதூா் அருகே வந்தபோது எதிரே திருத்தணி நோக்கி சென்ற வந்த மற்றொரு காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த அரியான் கோபிநாதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4,351 வழக்குகளுக்கு தீா்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 7,604 வழக்குகள் வரையில் சமரசத் தீா்வுக்கு எடுக்கப்பட்டு, 4351 வழக்குகளுக்கு முடித்து வைத்து ரூ.19.18 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது வழக்கு

பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா். திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகையில் அரசு... மேலும் பார்க்க

திருவள்ளூா்: இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 9 இடங்களில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் குறித்த சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் ... மேலும் பார்க்க

மீஞ்சூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு

மீஞ்சூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வியாபாரிகள் கடும் வாக்குவாதம் செய்ததால் அவா்கள் திரும்பிச் சென்றனா். மீஞ்சூரில் உள்ள பொன்னேரி - திருவொற்றியூா் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

திருவள்ளூரில் இன்று 4-ஆவது புத்தகத் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 4-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.மு.நாசா் ஆகியோா் தொடங்கி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 போ் காயம்

செல்லாத்தூா் கிராமம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சஞ்சீவிபுரம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க