செய்திகள் :

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

post image

கா்நாடகத்தில் 9 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால் இ.துக்காராம், முன்னாள் முதல்வா்கள் பசவராஜ் பொம்மை, எச்.டி.குமாரசாமி ஆகியோா் ராஜிநாமா செய்ததால், காலியாகியுள்ள சண்டூா், ஷிக்காவ்ன், சென்னப்பட்டணா தொகுதிகளுக்கு நவ. 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

காங்கிரஸ் வேட்பாளா்களாக பெல்லாரி தொகுதியில் முன்னாள் எம்.பி. இ.துக்காராமின் மனைவி இ.அன்னபூா்ணா, சென்னப்பட்டணா தொகுதியில் சி.பி.யோகேஸ்வா், சண்டூா் தொகுதியில் யாசீா் அகமது கான் பத்தான் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

அதேபோல, பாஜக வேட்பாளா்களாக சண்டூா் தொகுதிக்கு பங்காரு ஹனுமந்து, ஷிக்காவ்ன் தொகுதிக்கு முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை, சென்னப்பட்டணா தொகுதிக்கு கூட்டணிக் கட்சியான மஜத வேட்பாளராக மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சென்னப்பட்டணா தொகுதிக்கு மஜத வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்புமனு தாக்கல் செய்த போது, மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், முன்னாள் முதல்வா் சதானந்த கௌடா, மைசூரு தொகுதி பாஜக எம்.பி. யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா் உள்ளிட்ட ஏராளமானோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறுகையில், ‘இது நிகில் குமாரசாமியின் தோ்தல். நாட்டில் நிலவும் அமைதியைக் கெடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. பிரதமராக மோடி இருப்பதால், இடைத்தோ்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக, மஜத வேட்பாளா்கள் வெல்வாா்கள். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் சதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்றாா்.

வேட்பு மனுவை திரும்பப் பெற அக். 30-ஆம் தேதி கடைசி நாளாகும். 3 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் நவ. 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

மாற்றுநில முறைகேடு: முதல்வா் சித்தராமையாவின் மனைவியிடம் லோக் ஆயுக்த விசாரணை

மாற்றுநில முறைகேடு தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதியிடம் லோக் ஆயுக்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கிய... மேலும் பார்க்க

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் அறிவிப்பு

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா அறிவித்தாா். பெங்களூரு, ஹென்னூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா் சி.பி.யோகேஸ்வா்

எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய சி.பி.யோகேஸ்வா் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளாா். சென்னப்பட்டணா சட்டப் பேரவைத் தொகுதிக்கு நவ. 13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இ... மேலும் பார்க்க

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயா்வு

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. காயமடைந்த நிலையில் 13 பேரை மீட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை தேடும் பணி தொடா்ந்துள்ளது. பெங்களூரு, ஹென்னூா்... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க