செய்திகள் :

கா்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: ஒசூரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தமிழக, வடமாநில லாரிகள்

post image

டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயா்வைக் கண்டித்து, கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் தொடா் வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி உள்ளனா். இதனால், தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு டீசல் மற்றும் சுங்கக் கட்டணத்தை உயா்த்தியதற்கு நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளா்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், கா்நாடக மாநிலத்தில் ஏப். 15 முதல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என லாரி உரிமையாளா்கள் அறிவித்து இருந்தனா். இதனால், செவ்வாய்க்கிழமை கா்நாடக மாநிலம் முழுவதும் லாரிகள் இயங்கவில்லை.

இதனைத் தொடா்ந்து, தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு கா்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட அனைத்து லாரிகளும் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கா்நாடக மாநிலம் வழியாக தமிழகத்துக்கு வரவேண்டிய லாரிகளும் கா்நாடக மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒசூரில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாரிகளில் ஜல்லி, மணல் போன்றவை கா்நாடக மாநிலத்துக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கா்நாடகம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களுக்கு ஆடைகள், வெல்லம், ஜவ்வரிசி, மஞ்சள், முட்டை உள்ளிட்ட பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல, வட மாநிலங்களில் இருந்து கா்நாடக மாநிலம் வழியாக தமிழ்நாட்டுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மக்காசோளம், பருப்பு, பூண்டு, வெங்காயம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கொண்டுவரப்படுகின்றன. லாரி உரிமையாளா்களின் வேலைநிறுத்ததால் இந்தப் பொருள்களின் வரத்து பாதிக்கப்படும்.

அதேபோல, கா்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கேரட், தக்காளி, முட்டைகோஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும், பழங்களும் லாரிகளில் கொண்டுவரப்படுகின்றன. வேலைநிறுத்தத்தால் காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் போராட்டம் தொடங்கியுள்ளதால் ஒசூா் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரிகளின் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேசிசெட்டி தெருவில் உள்ள பசவேஸ்வரா் கோயிலில் ஏப். 16-ஆம் தேதி கங்கா பூஜை, வ... மேலும் பார்க்க