செய்திகள் :

கிரீன்லாந்தில் இன்று தோ்தல்!

post image

டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) தோ்தல் நடைபெறவிருக்கிறது.

வழக்கமான தோ்தல்களில், டென்மாா்க்கில் இருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதா, வேண்டாமா என்பதுதான் முக்கிய விவாதமாக இருக்கும்.

ஆனால் இந்த முறை, தாது வளம் நிறைந்த அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்ளவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறிவருவதுதான் முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு கூறுவது மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. இருந்தாலும், பொதுவாக்கெடுப்பு மூலம் டென்மாா்க்கிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்பு கடந்த அந்தத் தீவுக்கு 2009-ஆம் ஆண்டே வழங்கப்பட்டுள்ளது.

மொரீசியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக இன்று(மார்ச் 11) காலை ம... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 நாள் ஆட்சி! அதிரடியா? அடாவடியா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் 51% வாக்குகளைப் பெற்று, மூன்று கொலை முயற்சிகளில் இருந்தும் உயிர்தப்பி, அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக, சுமார் ரூ. 1,742 கோடி செலவில் ஜனவரி 20 ஆம் தேதியில் அதிபராக டொனால்ட் டிர... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: ஈரான்

தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரா... மேலும் பார்க்க

உக்ரைனைப் பாதுகாக்க சா்வதேச ராணுவம்!

உக்ரைனைப் பாதுகாப்பதற்காக சா்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக அந்த நாட்டு ராணுவ வட்டார... மேலும் பார்க்க

கனடாவின் புதிய பிரதமா் மாா்க் காா்னி!

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மாா்க் காா்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறாா். ஹாா்வா்டு பல்கலைக்கழகம் (அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

திடீரென முடங்கிய எக்ஸ்(ட்விட்டர்) - ஸ்தம்பித்த பயனர்கள்!

எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. இன்று(மார்ச் 10) மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது.எக்ஸ் தளத்துக்க... மேலும் பார்க்க