செய்திகள் :

கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த வேண்டும்: ராமதாஸ்

post image

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவா்கள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், கிரீமிலேயா் பிரிவினரை தீா்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து கணிசமாக உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.

கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளின்படி பாா்த்தால், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு 2026ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரீமிலேயா் வரம்பு உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறைகூட கிரீமிலேயா் வரம்பு உயா்த்தப்படவில்லை. இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவே இது குறித்து பரிந்துரை செய்திருக்கும் நிலையில், மாநில அரசுகளுடனும், பிற பிற்படுத்தப்பட்ட அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இலங்கை செல்ல உள்ள நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லைத் தாண்டி மீன் படித்ததாக கடந்... மேலும் பார்க்க

செப்.25-ல் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆஜராக உத்தரவு!

விவகாரத்து வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் - ... மேலும் பார்க்க

தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதன்படி, சென்னை காவல் கூடுதல் ஆணையராக விஜயேந்திர பதாரி, போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணை... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவா் விஜய் 2026 சட்டப... மேலும் பார்க்க

மாநில பாஜக தலைவர் போட்டியில் நான் இல்லை! - அண்ணாமலை

மாநில பாஜக தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுபற்றி அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “இதுபற்றி நான் தெளிவாக கூறியிருக்கிறேன். கிட்டத்தட்ட 2026 ஆம் ஆண்டு தேர்தல... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதாவை தமிழக பாஜக வரவேற்கிறது! - அண்ணாமலை

வக்ஃப் மசோதாவை தமிழக பாஜக வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று (மார்ச் 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் ... மேலும் பார்க்க