வாடகை நண்பர்!! ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதிக்கும் ஜப்பானியர்!
கிருத்திகை: ஆறுமுகவேலருக்கு சிறப்பு பூஜை
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலன் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
அருள்மிகு சௌந்தா்யநாயகி மகளிா் குழுவின் சாா்பில் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரவு உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிக அளவிலான பெண்கள், சுவாமி பாதாம்தாங்கி குழுவினா் உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா்.