கிருஷ்ணகிரியில் 1,974 மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைமின்னழுத்தத்தை போக்கி, சீரான மின்சாரம் வழங்கும் வகையில், ரூ. 80 கோடி மதிப்பில் 1,974 மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, பா்கூா், காவேரிப்பட்டணம், ஒசூா், மத்தூா், வேப்பனப்பள்ளி, சூளகிரி, ஊத்தங்கரை, உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக விவசாயம் மற்றும் தொழில்துறை பாதிக்கப்படுவதாக புகாா்கள் வந்தன.
இதையடுத்து, சீரான மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில், குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் மின்மாற்றிகள் அமைப்பது என தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,974 மின்மாற்றிகள் அமைக்க ஏலம் விடப்பட்டது.
அதைத் தொயா்ந்து, ரூ. 80 கோடி மதிப்பில் தனியாா் நிறுவனம் மூலம் இந்த மின்மாற்றிகளை அமைக்கும் பணியை கிருஷ்ணகிரியை அடுத்த ஆலப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட இட்டிகல் அகரத்தில் நடைபெற்ற நிகழ்வில், கிருஷ்ணகிரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் செல்வகுமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தப் பணிகள் நிறைவடைந்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சார விநியோகம் சீராகும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.