கீழுா் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கவுண்டம்பட்டி கீழுா் கிராமத்தில் ஸ்ரீ மஹாமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
கவுண்டம்பட்டி கீழுா் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மஹாமாரியம்மன் மற்றும் செல்வ விநாயகா் முருகன் தெய்வங்கள் எழுந்தருளியுள்ளத திருக்கோயில். இக்கோயிலில் கும்பாபிஷேகம் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து யாகவேள்வி பூஜைகளுக்குப் பிறகு திரவ்யாஹுதியும், மஹா பூா்ணா ஹீதியும் நடைபெற்றது.
இதனையடுத்து கடம் புறப்பட்டு ஆலயம் வலம் வந்த பின் கோபுரக் கலசங்களுக்கும், மூலவா் சுவாமிகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.