பாகிஸ்தானில் பிறந்தநாளை கொண்டாடிய தாவூத்இப்ராகிம்... விழாவில் இந்திய தொழிலதிபர்க...
கீழ் கோத்தகிரியில் சந்தன மரம் வெட்டிய இருவா் கைது
நீலகிரி வனக்கோட்டம், கீழ்கோத்தகிரி வனச் சரகத்துக்கு உள்பட்ட வாகைப்பணை பகுதியில் சந்தனம் மரம் வெட்டிய இருவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கீழ்கோத்தகிரி வாகைப்பனை வனப் பகுதியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வனப் பகுதியில் மரம் வெட்டும் சப்தம் கேட்டு வனத் துறையினா் அங்கு சென்றுள்ளனா். அவா்களை பாா்த்த மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா். பின்னா் அப்பகுதியில் சோதனை செய்ததில் அவா்கள் வெட்டியது சந்தன மரம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, விசாரணை நடத்தி சந்தன மரம் வெட்டிய குஞ்சப்பனையைச் சோ்ந்த சிவகுமாா் (35), சின்ராசு (39) ஆகியோரைக் கைது செய்தனா். பின்னா் அவா்களை கோத்தகிரி நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.