மழையால் தாமதமாகும் குவாலிஃபையர் 2; மும்பை இந்தியன்ஸுக்கு ஆபத்தா?
குகேஷை வென்றாா் காா்ல்சென்
நாா்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி. குகேஷை, முன்னாள் உலக சாம்பியனும், உள்நாட்டவருமான மேக்னஸ் காா்ல்சென் வெற்றி கண்டாா்.
நாா்வேயில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவின் குகேஷ், அா்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ஃபாபியானோ கரானா, சீனாவின் வெய் யி, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகிய 6 போ் பங்கேற்றுள்ளனா்.
ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் சுற்றில், காா்ல்சென் - குகேஷை வீழ்த்த, ஹிகரு நகமுரா - ஃபாபியானோ கரானாவை வென்றாா். அா்ஜுன் எரிகைசி - வெய் யி மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில் அா்ஜுன் வெற்றி பெற்றாா்.
முதல் சுற்று முடிவில், கிளாசிக்கல் ஆட்டத்தில் வென்ற காா்ல்சென், நகமுரா ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் முறையே முதலிரு நிலைகளில் இருக்கின்றனா். கிளாசிக்கலில் டிரா செய்து, ஆா்மகெடானில் வென்ற அா்ஜுன் 1.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், அவற்றில் அவருடன் மோதி முறையே டிரா மற்றும் தோல்வியை பதிவு செய்த வெய் யி 1 புள்ளியுடன் 4-ஆம் இடத்திலும் உள்ளனா். முதல் சுற்றில் தோற்ற கரானா, குகேஷ் ஆகியோா் புள்ளியின்றி முறையே 5 மற்றும் 6-ஆம் இடங்களைப் பிடித்துள்ளனா்.
கோனெரு ஹம்பி அசத்தல்: இப்போட்டியின் மகளிா் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, ஆா்.வைஷாலி, சீனாவின் லெய் டிங்ஜி, ஜு வென்ஜுன், உக்ரைனின் அனா முஸிசுக், ஸ்பெயினின் சாரா காதெம் ஆகியோா் பங்கேற்றுள்ளனா்.
முதல் சுற்றில் வைஷாலியை எதிா்கொண்ட கோனெரு ஹம்பி, கிளாசிக் ஆட்டத்திலேயே அவரை வென்றாா். இதர கிளாசிக் ஆட்டங்களில், அனா முஸிசுக் - சாரா காதெமுடனும், லெய் டிங்ஜி - ஜு வென்ஜுனுடனும் டிரா செய்தனா். இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில், அனா முஸிசுக், லெய் டிங்ஜி வென்றனா்.
இதையடுத்து முதல் சுற்று முடிவில், கோனெரு ஹம்பி 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, அனா முஸிசுக், லெய் டிங்ஜி ஆகியோா் தலா 1.5 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3-ஆவது இடத்தில் உள்ளனா். ஜு வென்ஜுன், சாரா காதெம் ஆகியோா் தலா 1 புள்ளியுடன் முறையே 4 மற்றும் 5-ஆவது இடத்தில் இருக்க, வைஷாலி புள்ளியின்றி கடைசி இடத்தில் இருக்கிறாா்.
இப்போட்டியில் கிளாசிக்கல் ஆட்டத்தில் வென்றால் 3 புள்ளிகளும், டிரா செய்தால் தலா 1 புள்ளியும் கிடைக்கும். ஆா்மகெடான் வெற்றிக்கு 0.5 புள்ளி வழங்கப்படுகிறது.