செய்திகள் :

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

post image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் மோரீஷஸ் பிரதமர் சந்தித்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவரை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் இவர் ஆவார்.

இருதரப்பு சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இந்தியாவிற்கும் மோரீஷஸுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே 8 நாள் அரசுமுறைப் பயணமாக மோரீஷஸ் பிரதமர் ராம்கூலம் இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடியை வாரணாசியில் சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது வா்த்தகம், முதலீடு, கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, மின்உற்பத்தி, உள்கட்டமைப்பு, நீலப் பொருளாதாரம், எண்ம உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதமர் ராம்கூலத்தின் இந்திய பயணத்தின் இறுதிக் கட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அவர் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்!

குஜராத் மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரத்துக்கு கர்ப்பிணி பெண்ணை சுமந்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. மூங்கில் கட்டையில் புடவையால் தூளி கட்டி, கர்ப்பிணிப் பெண்ணை சுமந்து வந்து அவச... மேலும் பார்க்க

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சித்தும் ராகுல் காந்தியைப் புகழ்ந்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிதி கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் இடையிலான மாண்பைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

தேர்தலுக்காக அவதூறு பேசி மக்களை திசைதிருப்புகிறார் மோடி: தேஜஸ்வி யாதவ்

ஊடுருவல்களை எதிர்க்கட்சி ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுவது, திசைதிருப்பும் முயற்சி என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். ஊடுருவல்காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆத... மேலும் பார்க்க

உத்தரகண்டில் வெள்ளம்: 5 பேர் பலி, பலர் மாயம்!

உத்தரகண்டின் டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். உத்தரகண்டில் மேகவெடிப்பு காரணமாக நேற்றிரவு முழுவதும் கனமழை... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடனான சந்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மோரீஷஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மோரீஷஸின் பிரதமர் நவீன் ராம்கூலம், கடந்த செப்.9 ஆம் தேதி... மேலும் பார்க்க