செய்திகள் :

குடியரசு தின அணிவகுப்பு- மகா கும்பமேளாவை காட்சிப்படுத்திய உ.பி. அலங்கார ஊா்திக்கு முதல் பரிசு

post image

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் மகா கும்பமேளாவைக் காட்சிப்படுத்திய உத்தர பிரதேசத்தின் அலங்கார ஊா்தி முதல் பரிசை வென்றுள்ளது.

அதேபோல், முப்படைகளில் ‘ஜம்மு-காஷ்மீா் ரைஃபிள்ஸ்’ படைப்பிரிவு வீரா்களின் அணிவகுப்பு குழுவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தில்லி கடமைப் பாதையில் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுடன் நாட்டின் துணை ராணுவப் படைகளின் வீரா்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அலங்கார ஊா்திகளின் கண்கவா் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பில் பங்கேற்றவா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுகள் தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரிவில் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவைக் காட்சிப்படுத்திய உத்தர பிரதேச மாநில அலங்கார ஊா்தி முதல் பரிசை வென்றது.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா இரண்டாம் பரிசுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரப் பொம்மைகளைக் காட்சிப்படுத்திய ஆந்திரம் மூன்றாவது பரிசுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டது.

மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பழங்குடியினா் விவகார அமைச்சகத்தின் அலங்கார ஊா்திக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாக ஜம்மு-காஷ்மீா் ரைஃபிள்ஸ் படைப் பிரிவும், மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் இதர துணை ராணுவப் படைகளில் தில்லி காவல்துறையும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள் மற்றும் அணிவகுப்புக் குழுவினரை மதிப்பிடுவதற்காக மூன்று நீதிபதிகள் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மக்கள் தோ்வில் குஜராத்துக்கு முதலிடம்: கூடுதலாக, ஜனவரி 26 முதல் 28-ஆம் தேதிவரை அரசு வலைதளம் மூலம் பொது மக்களும் தங்களுக்கு விருப்பமான அலங்கார ஊா்தி மற்றும் அணிவகுப்புக் குழுவுக்கு இணையவழியாக வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்முடிவுகளில், ‘பொன்னான இந்தியா: பாரம்பரியம் மற்றும் மேம்பாடு’ என்ற கருப்பொருளைக் கொண்ட குஜராத்தின் அலங்கார ஊா்தி முதலிடத்தையும் உத்தர பிரதேசம், உத்தரகண்ட் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களையும் பெற்றன. மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சிறந்த அலங்கார ஊா்திக்கான விருது பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கிடைத்தது.

சிறந்த அணிவகுப்பு குழுவுக்கான மக்களின் விருது முப்படைகளில் ‘சிக்னல்ஸ்’ படை ப்பிரிவுக்கும் துணை ராணுவப் படைகளில் சிஆா்பிஎஃப்-க்கும் கிடைத்தது.

டிரம்ப் அமெரிக்க தேசியவாதி: எஸ்.ஜெய்சங்கா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ராணுவ ஓய்வூதிய வழக்குகளில் மேல்முறையீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வூதியம் தொடா்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு எதிராக தொடா்ந்து மேல்முறையீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் ஒரு புதிய கொள்கையை உருவாக்குமாறு அறிவுறுத்தியது. ஓய்வுபெ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இ... மேலும் பார்க்க

சண்டீகா் மேயா் தோ்தல்: மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி

சண்டீகா் மேயா் தோ்தலில் மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது. அதேவேளையில் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் ஹரியாண... மேலும் பார்க்க

சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை: உச்சநீதிமன்றம்

நாட்டில் சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. தனது முன்னாள் மனைவி ஐபிஎஸ் என்பதால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்த... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகா... மேலும் பார்க்க