குடும்பஸ்தன் வெளியீட்டுத் தேதி!
நடிகர் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே. மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.
அதன் வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: காலில் காயம்! ராஷ்மிகாவால் படப்பிடிப்புகள் பாதிப்பு!
சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வித்தியாசமான கதைகளைத் தேடும் நடிகரான மணிகண்டன் இப்படத்திலும் கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் ஜன. 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.