9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமியைப் பலியிட்ட தம்பதி: கோவாவில் அதிர்ச்சி!
கோவாவில் அண்டை வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமியைக் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் வசித்துவருபவர் பாபாசாகேப் அலார்(52) அவரது மனைவி பூஜா(45). தம்பதியினர் மந்திரவாதி ஒருவரிடம் சென்று தங்கள் துயரைப் போக்க வழி கேட்டுள்ளனர். அதற்கு அவர் சில பரிகாரங்களை சொல்லி அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், தம்பதியினர் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகே 5 வயது சிறுமி காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராம் வைகங்கர் தெரிவித்தார்.
வீட்டின் வெளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்தனர். தம்பதியினர் தங்கியிருந்த வீட்டிற்குள் 5 வயது சிறுமி நுழைந்தது , அதன்பின்னர் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்தது.
தம்பதியினரை போலீஸார் பிடித்து விசாரித்ததில், குழந்தை இல்லாத தம்பதியினர் மந்திரவாதி ஒருவரின் குடும்ப பிரச்னைகள் தீர ஆலோசனை கேட்டதாகவும், மந்திரவாதி 5 வயது சிறுமியைக் கொன்று புதைக்கவேண்டும் என்று கூறியதாகவும் தம்பதியினர் கூறினர்.
இதையடுத்து ஐந்து வயது சிறுமியைப் பலியிடுவதால் தங்களின் குடும்ப பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கையில், சிறுமியைக் கொன்று, உடலை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக அந்த அதிகாரி கூறினார்.
கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.